Curriculum

  • போக்குவரத்து
    • பிரயாண வழிமுறைகள், வண்டிகளின் வகைகள், பயண அனுபவங்கள், விருப்பமான பயண முறைகள். உங்களுக்குப் புகைவண்டியில் போக விருப்பமா? வாகனங்களின் தமிழ்ப் பெயர்கள் அறிதல்.
      இலக்கணம்:- முன்பு பின்பு, தாமதம், சற்று நேரம் பொறுத்து. போன்ற சொற்களைக் குறிப்பிடுதல்.
      பிரயாணம் பற்றி விபரித்தல். அது தொடர்பான மறக்க முடியாத சம்பவக் கதைகளைக் கூறுதல். மாணவர்களிடம் இருந்து கேட்டல். பாடசாலைக்குச் செல்லும் வழி, உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழி பற்றி அறிதல்.

  • விடுமுறை, காலநிலை, பார்க்கவேண்டிய இடங்கள் பற்றியும் பேசுதல்
    • உ+ம்:- எனது குடும்பத்தினருடன் நான் ஜேர்மனி சென்றேன். லூர்த் மாதா தேவாலயம் பிரான்சில் உள்ளது.
      எங்கே? எப்படி? எவருடன்? எத்தகைய? போன்ற கேள்விகளையும், சொற்களையும் அறிதல்.

  • உணவுகள், சிற்றுண்டிகள், பானங்கள் பற்றிச் சிறிது விரிவாக அறிதல்
    • காலநிலைக்கு ஏற்ப உணவுகள் உட்கொள்ளும் முறை, ஆரோக்கிய உணவுகள் பற்றி அறிதல், மேலைநாட்டு உணவு, நம் நாட்டு உணவு பற்றி அறிதல்.

  • அன்பளிப்புகள், பணம் கொடுத்தல், வாங்குதல்
    • வழிகள் கூறுதல். (ஒருவருக்கு வழிகாட்டல்) எப்படி அன்பளிப்புகளைத் தெரிவு செய்தல்.
      சொற்களை அகர வரிசைப்படி எழுதுதல்.
      கடையில் பொருட்கள் வாங்கிய பின்பு பணத்தின் மீதியை கேட்டு வாங்குதல்.

  • தொழில்கள் பற்றிய அறிவை ஏற்படுத்தல்
    • அவற்றின் விளக்கம் அறிதல். அவள் ஒரு தாதி. அவர் ஒரு ஆசிரியர் தொழிலும் அது சம்பந்தமான படங்களும் விரும்பும் தொழில் பற்றிப் பேசுதல்.
      யார் யார் எங்கு எங்கே தொழில் புரிகிறார்கள் என்று அறிதல். குடும்ப அங்கத்தவர்களின் தொழில்கள். நீங்கள் விரும்பும் தொழில். செயல்முறைகளும் அவற்றின் பிரயோகமும்.

  • குறிப்புகள் கூறுதல், விமர்சனம் செய்தல்
    • நல்லூர் கோவில் - கண்டி தலதாமாளிகை, பிரான்ஸ் லூர்த் மாதா கோவில் பிரித்தானியா - தாவரவியல் பூங்கா மதுரை, சிதம்பரம் பற்றிப் பேசுதல்
      எமது நாட்டின் பிரபல்யங்களையும், பிரபல்யமான இடங்கள் பற்றியும் அறிதல்.
      மலைவளம், ஆற்றுப்படுக்கை, வயல்வெளி போன்ற புதுச் சொற்களை வைத்து கதைகள் கூறுதல்.
      அதன் மூலம் சொல்வளம் பெருகச் செய்தல். சொற்களுக்கு மொழிபெயர்ப்புகள் செய்தல். ஆங்கிலத்திலிருந்து தமிழ். தமிழிலிருந்து ஆங்கிலம்.


Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 1
Past papers: Set 2


Resources

Recommended books