Curriculum

  • பழக்கப்பட்ட உணவு, பானங்கள்
    • உண்ணும் பழக்க வழக்கங்களை அறிதல். உணவு, பானங்கள் பற்றி அபிப்பிராயங்கள் கூறுதல்.
      பிடித்த, பிடிக்காத உணவு பற்றிப் பேசுதல். ஏன் பிடிக்கவில்லை, பிடிக்கும் என்று உரையாடுதல். உணவின் சுவைகள் பற்றிக் கலந்துரையாடுதல்.
      உ+ம்:- உனக்கு பிடித்த உணவு என்ன? சுவையாக இருக்கிறதா? என்ன சுவையை உணருகிறீர்? போன்று உரையாடுதல். எழுதப் பழகுதல்.

  • ஒருமை, பன்மை, அடைமொழிகள், கேள்விகள்.
    • நிறங்கள் அடைச்சொற்கள் பாவித்தல்.
      பயிற்சி:- சிறிய வசனங்களை விபரமாகப் விரிவாக எழுதுதல்.

  • தமிழர் விழாக்களும், அதன் சிறப்பு உணவு வகைகளும்.
    • உ+ம்:- என்ன உணவைத் தைப்பொங்கல் அன்று சமைப்பீர்கள்?
      உங்கள் பிறந்தநாள் அன்று என்ன உணவை விஷேடமாக தயாரிப்பீர்கள்?
      எனக்கு இனிப்புகள் விருப்பம்.
      எனக்குப் பால்ப் பொருட்கள் ஒத்து வருவதில்லை.
      உங்களுக்கு இடியப்பம் பிடிக்குமா?

  • எண்கள், நேரங்கள், நாட்கள், கிழமைகள் கணித்துக் கூறுதல்.
    • நாளாந்த செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுதல்.
      உ+ம்:- எத்தனை மணிக்கு நித்திரை விட்டு எழும்புவீர்கள்? எத்தனை, இடியப்பம் சாப்பிடுவாய்? எத்தனை மணிக்குப் பாடசாலை ஆரம்பம்?

      1 தொடக்கம் 100 வரை உள்ள எண்களை தமிழில் எழுதுதல்.
      கிழமைகள், மாதங்கள் எழுத சொல்ல தெரியப்படுத்தல். நாளின் பகுதிகளை அடையாளம் காணல்.
      உ+ம்:- இன்று திங்கட்கிழமை நாளை என்ன கிழமை? வெள்ளிக்கிழமை காலை என்ன செய்தீர்கள்?

  • இலக்கணம்.
    • பெயர்ச்சொற்கள், வினைச் சொற்கள், காலங்கள் (நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம்), வினா வடிவங்கள், இணைப்புச் சொற்கள்.

  • விழாக்களைப் பற்றி அறிதல்.
    • தைப்பொங்கல் விழாவின் முக்கியத்துவம். கொண்டாடும் முறை பற்றி அறிதல். அது சம்பந்தமான சொற்களைப் பற்றி அறிதல். அவ் விழா பற்றிய கதைகள், பாட்டுகள் பற்றி உரையாடிப், பாடிப் பழகுதல்.
      உ+ம்:- குளித்துப் புத்தாடை அணிதல். பொங்கல் செய்தல், விவசாயம், கதிரவன்.
      பாரம்பரிய கலை கலலாச்சார நிகழ்ச்சிகள் பற்றி அறிதல்.

  • மற்றவர்களை வழி நடத்துதல்
    • கட்டளைகளைப் பிறப்பித்தல். ஒன்றைச் செய்யும்படி வேண்டுதலாகக் கேட்டல்.
      பண்பறிதல். நன்றி சொல்லுதல். மன்னிப்புக் கேட்டல், வணக்கம் செலுத்துதல். பெரியோரை கனம் பண்ணுதல் (அவை செய்யும் முறை) ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுதல். மரியாதை செலத்துதல். மீளாய்வு, காத்திருத்தல்.

  • பொழுது போக்கு
    • பிடித்தது, பிடிக்காதது, பொழுதுபோக்கு வகைகள்.
      பொழுது போக்கு நேரத்தில் என்ன செய்வீர்கள்?
      செயற்பாடுகளும் அவற்றிக்கு இடையேயான நேர இடைவெளி, நான் எப்பொழுதும் விளையாடுவேன்.

  • இலக்கணக் காலங்களை விரிவாகப் பார்த்தல்.
    • எமக்கு விருப்பமான விசயங்களை மனம் விட்டுப் பேசுதல்.
      சொற்பஞ்சம் இன்றி தொடர்ந்து பேசுதல்.
      கதை, பாட்டுக் கூறுதல். சொற் தொடர்களைப் பாவித்தல். புதிய சொற்களை அறிதல்.


Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 1
Past papers: Set 2


Resources

Recommended books